ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று செய்யப்பட்டது. அதில் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இருக்கும் வகையில் படம் ஒன்று இருந்தது.
அதில் அவர் மும்பை மற்றும் லக்னோ போட்டி தொடர்பாக சிந்தித்து வருவதாக போடப்பட்டிருந்தது. அந்தப் பதிவை டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் லைக் செய்து ஒரு கமெண்டை பதிவு செய்திருந்தார். அவர் பதிவை தொடர்ந்து இந்தப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருகின்றனர். ஆகவே பசில் தம்பி அல்லது ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு பதிலாக இந்தப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அவர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இன்றைய போட்டியில் அவர் அறிமுக வீரராக களமிறங்குவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்