ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தவிர்க்க செய்ய வேண்டியது என்னென்ன?
நம்பர் 3ல் சூர்யகுமார் யாதவ்:
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின்னர் அவர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இம்முறை 4ஆவது இடத்தில் களமிறங்கி வருகிறார். இவர் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார். எனினும் மும்பை இந்தியன்ஸ் அணி இத்தொடரில் 7-16 ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. ஆகவே நம்பர் 3 இடத்தில் அணியின் அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த 5 போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கி தந்து வருகின்றனர். டைமல் மில்ஸ், டேனியல் சேம்ஸ் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக ரன்களை தந்து வருகின்றனர். பும்ராவும் சற்று அதிகமாக ரன்களை கொடுத்து வருகிறார். இவர்கள் அனைவரும் குறிப்பாக ஒரு ஓவருக்கு சராசரியாக 9.6 ரன்கள் கொடுத்து வருகின்றனர். இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதை மும்பை அணி நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்