ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேப்டன் டூபிளசிஸ் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 


 


ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் குஜராத் அணியின் வீரர் பிரதீப் சங்வான் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் கேப்டன் டூபிளசிஸ் டக் அவுட்டாகினார். அதன்பின்னர் விராட் கோலியுடன் ராஜாட் பட்டிதார் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விராட் கோலி பவுண்டரிகளை மழையை பொழிந்தார். அத்துடன் 45 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் முதல் அரைசதம் இதுவாகும். நடப்புத் தொடர்ந்து சொதப்பி வந்த விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் கடந்துள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது.  மேலும் விராட் கோலி 14 ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். 


விராட் கோலியின் அரைசதம் தொடர்பாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண