பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விஸ்ரூபம் எடுத்த சிஎஸ்கே அணி அந்த அணிக்கு 217 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 200 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 21 முறை 200 ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அத்துடன் பெங்களூர் அணியின் சாதனையையும் சமன் செய்தது.


நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வருகிறது. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு வீரர்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ், மொயின் அலி அவுட் ஆகி சென்ற பிறகு ஷிவம் டுபே, உத்தப்பா ஆகியோர் முதலில் பொறுமையாக ஆடி, 10 ஓவர்களுக்கு பிறகு ஆர்சிபி பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் மாறி மாறி அடித்து அணியின் ரன்களை வேகமாக ஏற்றினார்கள். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் அடித்த சிஎஸ்கே அடுத்த 10 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.


துபே, உத்தப்பா ஒரு ஓவருக்கு ஒரு சிக்சர் என 16 ஓவரில் இருந்து அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த பிறகுதான், இன்னும் அதிரடி காட்டினர். சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை செய்யாமல் சென்றுவிட்டனர். இதில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் தொடலாம் என்ற நிலையில் துபே இருந்தார். ஆனால், அவர் அடித்த பந்து டு பிளிசஸ் இடம் கேட்ச் ஆனது. அவர் பந்தை கீழே வைத்ததால், 95 நாட் அவுட் உடன் துபே பெவிலியன் திரும்பினார். 


இறுதியில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. 200 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 21ஆவது முறையாக சிஎஸ்கே 200 அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பாக ஆர்சிபி 21 முறை 200 ரன்கள் அடித்த என்ற சாதனையை கொண்டிருந்தது. அந்த சாதனையை தற்போது சிஎஸ்கே சமன் செய்தது.


ஐபிஎல் தொடரில் அதிக முறை 200 ரன்கள் அடித்த அணிகள்


சிஎஸ்கே - 21 -
ஆர்சிபி - 21
மும்பை இந்தியன்ஸ் - 16 
பஞ்சாப் கிங்ஸ் - 15 
கேகேஆர் - 13 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண