2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். அதேபோல், கடைசியாக இந்திய அணி விளையாடிய தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அதன்படி, வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிட்ட சென்னை அணி மீண்டும் தீபக் சாஹரை அதிக விலைக்கு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய 3வது டி20 போட்டியின்போது சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் குணமடைந்து அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்த்திருந்தபோது இப்போது மீண்டும் அவருக்கு முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து அவர் விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 






இது, சென்னை அணிக்கு மிகவும் பின்னடைவாக அமையும். சென்னை அணியின் கேப்டன் தோனியை கூட அந்த அணி 12 கோடிக்கு  தக்கவைத்தநிலையில், தீபக் சஹாருக்கு 14 கோடி கொடுத்து வாங்கிய நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.






நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. ஆகவே பலம் வாய்ந்த பெங்களூரு அணியை இம்முறை தடுமாறி வரும் சென்னை அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 




மேலும் படிக்க: Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண