2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இந்தநிலையில், முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். 


கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க தடுமாறி வந்த ருதுராஜ், சிராஜ் வீசிய 3வது ஓவர் 2 வது பந்தில் பௌண்டரியை தெறிக்க விட்டார். தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஹசல்வுட் வீசிய நான்காவது பந்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 17 ரன்களில் LBW முறையில் அவுட் ஆனார். 


அடுத்ததாக உள்ளே வந்த மொயின் அலி, மேக்ஸ்வல் வீசிய 7 வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கையினால் ரன் அவுட்டாகி வெளியேறினார். உத்தப்பாவுடன் இணைந்த சிவம் துபே அதிரடி காட்ட, சென்னை அணியின் ரன் எண்ணிக்கை சரசரவென உயர்ந்தது. 


சென்னை அணிக்கு தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த ராபின் உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து சிவம் துபேவும் 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இந்த ஜோடி நாலாபக்கமும் பந்துகளை சிதறவிட்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சென்னை அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. 


தொடர்ந்து, சிராஜ் வீசிய 17 வது ஓவரில் உத்தப்பா, இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரியை ஓடவிட்டார். அதுக்கு அடுத்த ஓவரில் துபே தன் பங்கிற்கு 2 சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து மிரட்டினார்.


ஹசரங்கா வீசிய 19 வது ஓவரில் சென்னை அணி 200 ரன்களை கடந்த நிலையில், அடித்து ஆடிய ராபின் உத்தப்பா 88 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து உள்ளே வந்த ஜடேஜாவும் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


கடைசி ஓவரில் துபே தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 94 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 216 ரன்கள் எடுத்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண