2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக அனைத்து அணியின் வீரர்களும் மும்பையிலுள்ள நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல் ஐபிஎல் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. 


இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. முதல் ஐபிஎல் முதல் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை வீரராக சுரேஷ் ரெய்னா களமிறங்கி வந்தார். ஐபிஎல் தொடரில் இவருடைய சிறப்பான செயல்பாட்டை பார்த்து இவருக்கு மிஸ்டர் ஐபிஎல் என்ற பட்டமும் கிடைத்தது. 






எனினும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதன்பின்னர் குஜராத் அணி காயம் காரணமாக மாற்று வீரரை தேடி கொண்டிருந்த போது அதற்கு சுரேஷ் ரெய்னா எடுக்கப்படுவார் என்று பலரும் ட்விட்டரில் கருத்து கூறி வந்தனர். எனினும் ரெய்னாவை அந்த அணி எடுக்கவில்லை. ஆஃப்கானிஸ்தான் வீரர் ரமனுல்லா குர்பாஜை அந்த அணி எடுத்தது. இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் ரெய்னா விளையாட மாட்டார் என்று அவருடைய ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.


அதனை அடுத்து, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து வர்ணனையாளராக களமிறங்க இருக்கிறார். இது குறித்த செய்தியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ரெய்னா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண