இந்திய கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு இடம்பிடித்து கலக்கியவர் நடராஜன். குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இவர் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் அவதிப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். 






கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இரண்டாவது பாதியில் நடராஜன் பங்கேற்கவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இருந்து விலகினார் அவர். 


இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு மீண்டும் ஹைதராபாத் அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். தற்போது நல்ல உடற்தகுதி பெற்று ஹைதராபாத் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார். 



கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் ஒரு கலக்கு கலக்கினார். அதேபோல், அவர் இந்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தமிழ்நாடு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். 


இந்தசூழலில், ஹைதராபாத் அணியில் நடராஜன் பயிற்சி மேற்கொண்ட வீடியோ ஒன்றை ஹைதராபாத் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நடராஜன் வேகமாக ஓடிவந்து தனது வழக்கமான பந்து வீசும் ஸ்டைலில் பந்து வீச, பந்து நேராக ஸ்டெம்பை பதம் பார்த்து ஸ்டெம்பும் உடைந்து பறந்தது. தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண