ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. 


 


இந்நிலையில் எதற்காக சூரத்தில் பயிற்சி செய்கிறோம் என்பது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அணி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் கடந்த ஒரு வாரமாக இங்கு சிறப்பாக பயிற்சி செய்து வருகிறோம். அனைத்து அணிகளும் மும்பையில் பயிற்சி செய்வதால் எங்களுக்கு பயிற்சி செய்ய சிக்கலாக இருந்திருக்கும். ஆகவே தான் நாங்கள் மும்பைக்கு பதிலாக அதே போன்று சூழல் உள்ள சூரத் நகரை பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தோம். 


 






இந்த முழு ஆடுகளமும் எங்களுக்கு கிடைத்தது. இதன்காரணமாக நீண்ட நேரம் நாங்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டோம். அத்துடன் சில பயிற்சி போட்டிகளும் விளையாடினோம். இது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.


 


ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு ருதுராஜ் கெய்க்வாட் முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்போட்டிக்கு மொயின் அலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் சென்னை அணி கடந்த ஒரு வாரமாக ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறது. எனவே முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:சிவப்பு நிற ஜெர்ஸியில், கெத்தாக களமிறங்கிய டுப்ளிசி... அப்செட்டான சென்னை ரசிகர்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண