ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்க முதலே விக்கெட்டை இழந்து வந்தது. குறிப்பாக 2ஆவது ஓவரில் மூன்று விக்கெட் இழந்தது. இறுதியில் 16.1 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜன்சன் மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட் எடுத்து அசத்தினர். 


69 ரன்கள் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். 4 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 47 ரன்கள் எடுத்திருந்தப் போது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த ராகுல் திரிபாதி 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 8 ஓவர்களில் 72 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 


 




முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி 6ஆவது குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி இதே நாளில் 49 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்னர் இன்று நடைபெற்ற போட்டியில் 68 ரன்களில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஐபிஎல் போட்டிகளில் குறைவான ஸ்கோர்கள்:


49 ஆர்சிபி vs கொல்கத்தா 2017
58 ராஜஸ்தான் ராயல்ஸ் vs ஆர்சிபி 2009
66 டெல்லி vs மும்பை 2017
67 டெல்லி vs பஞ்சாப் 2017
67 கொல்கத்தா vs மும்பை 2008
68 ஆர்சிபி  vs சன்ரைசர்ஸ் 2022




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண