ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கேப்டன் மாயங்க் அகர்வால் களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்திலேயே ஷிகர் தவான் 2 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த ஷிகர் தவான் புது சாதனை படைத்ததுடன், எப்போதும் சென்னை அணிக்கு எதிராக ஆபத்தான வீரராகவும் திகழ்ந்து வருகிறது. சென்னைக்கு எதிராக இவரது கடைசி 5 இன்னிங்ஸ் மிக சிறப்பாகவே அமைந்துள்ளது.
ஷிகர் தவான் vs சிஎஸ்கே :
ஷிகர் தவான் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 40.91 சராசரியுடன் 941 ரன்களை எடுத்துள்ளார். இதில், ஏழு அரை சதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் தவான் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து 265 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 101* ஷிகரின் சிறந்த ஸ்கோர் ஆகும்.
தற்போது நடைபெற்று வரும் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் ஷிகர் தவான் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்