ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சென்னை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 


இந்நிலையில் சென்னை அணியின் வீரர் மொயின் அலிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் அடுத்து 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே காயம் காரணமாக தீபக் சாஹர் மற்றும் ஆடம் மில்னே உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் மொயின் அலியும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளதாக தெரிகிறது. 


 






நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே அவருடைய திருமணத்திற்காக நியூசிலாந்து சென்றுள்ளார். அவர் திருமணம் முடிந்த பிறகு இந்தியா திரும்பி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அணியில் இணைவார். ஆகவே அவரும் அடுத்த ஒரு வாரம் வரை போட்டிகளில் பங்கேற்க மாட்டர் என்று கருதப்படுகிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் விசா பிரச்னை காரணமாக மொயின் அலி பங்கேற்கவில்லை. அதன்பின்னர் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்தார். இந்தச் சூழலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடப்புத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் தற்போது வரை சரியாக குணம் அடையவில்லை என்று தெரியவந்துள்ளது. எனினும் அவர் அடுத்து எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது அடுத்து வரும் நாட்களில் தெளிவாக தெரியவரும் என்று கூறப்படுகிறது. 




மேலும் படிக்க: CSK Vs PBKS, IPL 2022 Live: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி : சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண