இந்திய கிரிக்கெட் உலகில் பெரிய திருவிழா என்றால் அது ஐபிஎல் தொடர் தான். அந்தவகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.


 


இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?


 


5.ரோகித் சர்மா:




மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் விலாசுவதில் வல்லவர். இவர் தற்போது வரை 213 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 491 பவுண்டரிகள் விளாசியுள்ளார். அத்துடன் இவர் 227 சிக்சர்களையும் விளாசியுள்ளார். 


 


4.சுரேஷ் ரெய்னா:




மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படுபவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல ரெய்னா. இவர் தன்னுடைய அசாத்திய பேட்டிங் திறமையால் எதிரணியை திக்கு முக்காட வைப்பவர். இவர் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 506 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அத்துடன் 203 சிக்சர்களையும் விளாசியுள்ளார். 


 


3.டேவிட் வார்னர்:




ஐபிஎல் தொடர் மூலம் பல இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இவர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 525 பவுண்டரிகள் அடித்துள்ளார். அத்துடன் 201 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.


 


2.விராட் கோலி:




ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் விராட் கோலி தான். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ஒரே அணிக்காக விளையாடிய ஒரே வீரர் கோலி மட்டும் தான். இவர் 207 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 546 பவுண்டரிகள் அடித்துள்ளார். அத்துடன் 210 சிக்சர்களையும் அடித்துள்ளார். 


 


1.ஷிகர் தவான்:




ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஷிகர் தவான் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரும் தன்னுடைய சிறப்பான தொடக்க ஆட்டத்தின் மூலம் பல அணிகளுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இவர் 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 654 பவுண்டரிகளை அடித்துள்ளார். அத்துடன் 124 சிக்சர்களை அடித்துள்ளார். முதலிடத்தில் உள்ள இவருக்கும் இரண்டாம் இடத்திலுள்ள கோலிக்கும் சுமார் 100 பவுண்டரிகள் வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண