கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது இந்தாண்டு 15 சீசனை கடந்து வெற்றிக்கரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் 15 சீசன் தொடர் இன்றுவரை 27 போட்டிகளை கடந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 


இந்த தொடருக்கான ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில் அன்றைய நாளில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 


 ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2019 ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறைவு விழா நடத்தப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, 2020, 2021 ம் ஆண்டுகளில் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறவில்லை. இந்தநிலையில், வருகிற மே 29 ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி முடிந்ததும் நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 






இதையடுத்து, இந்தியன் பிரீமியர் லீக்கின் நிறைவு விழாவை டெண்டர் மூலம் நடத்த ஆர்வமுள்ள நிறுவனங்களிடம் இருந்து பிசிசிஐ (இன்று) சனிக்கிழமை ஏலங்களை விட அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிறைவு விழாவை நடத்தும் நிறுவனத்திற்கு டெண்டர் செயல்முறையின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தகுதித் தேவைகள், ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை, உரிமைகள் மற்றும் கடமைகள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் தலா 1 லட்சம் முன் பணமாக கட்டவேண்டும் என்றும், ஏலத்திற்கு பிறகு பணம் திருப்பி அளிக்கப்படாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15 வது சீசன் நிறைவு விழாவை நடத்துவதற்கான திட்டத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பிறகு நிறைவு விழா நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஐபிஎல் தொடரில் காலம் காலமாக நிகழ்ந்துவந்த நிறைவு விழா மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம், இந்தாண்டு ரசிகர்கள் நிச்சயம் நிறைவு விழாவை காணுவார்கள்" என்று தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண