MI vs LSG, 1st innings: ராகுல் ஒன் மேன் ஷோ... முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணிக்கு சவாலான இலக்கு!

பாண்டே 38 ரன்கள் எடுக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்கள் எடுக்க, தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க, ராகுல் மட்டும் அதிரடியை தொடர்ந்தார். 

Continues below advertisement

ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

Continues below advertisement

இந்த போட்டியில் ராகுல், டி காக் ஓப்பனிங் களமிறங்கினர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் அவுட்டாக, ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். பாண்டே 38 ரன்கள் எடுக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்கள் எடுக்க, தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க, ராகுல் மட்டும் அதிரடியை தொடர்ந்தார். 

9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார் ராகுல். இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடித்த இரண்டு சதம் அடங்கும்.

ராகுலின் ஒன் மேன் ஷோவால், மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.  இதனால், 200 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின்னர் அவர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இம்முறை 4ஆவது இடத்தில் களமிறங்கி வருகிறார். இவர் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார். எனினும் மும்பை இந்தியன்ஸ் அணி இத்தொடரில் 7-16 ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. ஆகவே நம்பர் 3 இடத்தில் அணியின் அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola