கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2022 தொடர் மார்ச் 26-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இம்முறை பங்கேற்க இருக்கும் 10 அணி வீரர்களும் பயோ பபிள் முறையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 


பயிற்சி களத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் சமூக வைலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டன் டுப்ளிசியின் முதல் நாள் பயிற்சி ஆட்டத்தை யூட்யூபில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், டுப்ளிசி கடைசியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ’மிஸ் யூ’ கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வீடியோவில், டுப்ளிசி அணி வீரர்களுடன் உரையாடுகிறார். கேப்டனாக வழிநடத்திச் செல்கிறார். மேலும், பேட்டிங் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் டுப்ளிசியை மஞ்சள் நிற ஜெர்ஸியில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சிவப்பு நிற ஜெர்ஸியில் பார்ப்பது புதிதாக இருந்திருக்கும். சென்னை அணி ரசிகர்கள் கொஞ்சம் சோகமாகவும், புதிய கேப்டனை வரவேற்ற பெங்களூரு ரசிகர்கள் இம்முறை கோப்பையை அடிக்கும் முனைப்பிலும் உற்சாகம் அளித்து வருகின்றனர்.


வீடியோவைக் காண:






டுப்ளிசிஸ் இதுவரை 100 ஐ.பி.எல். போட்டிகளில்  ஆடி 2 ஆயிரத்து 935 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 22 அரைசதங்கள அடங்கும். அதிகபட்சமாக 96 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 50 டி20 போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 1,528 ரன்களை குவித்துள்ளார். 143 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்களுடன் 5 ஆயிரத்து 507 ரன்களை குவித்துள்ளார். 69 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 21 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 163 ரன்களை எடுத்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண