டாடா ஐ.பி.எல். போட்டி 2022-க்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வரும் 26-ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனால், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்தில் மட்டுமே இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி எப்படியாவது கோப்பையை வெல்லும் முயற்சியில் களம் இறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 






மேலும், அந்த அணியில் கூடுதல் பலமாக புதிய பந்துவீச்சாளர் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா செயல்பட்டு வருகிறார். தற்போது, இலங்கை அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கா பந்துவீச்சாளர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அதிக எதிர்ப்பார்ப்பை தருகிறது. 


இந்த சூழலில் லசித் மலிங்கா நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டெம்பை பறக்கவிடும் வீடியோக்காட்சி ஒன்றை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மலிங்கா நின்றபடி, தனது கைகளை நீட்டி வீசுகிறார். அப்பொழுது, பந்து மிக சரியாக சென்று ஸ்டெம்ப் மீது பட்டு தெரிகிறது. தொடர்ந்து, ஒன்றுமே தெரியாத சிறுபிள்ளை போல, மலிங்கா அந்த இடத்தை விட்டு நகர்கிறார். 






இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். யார்க்கர் மற்றும் டெத் ஓவர்கள் வீசுவதில் வல்லவரான லசித் மலிங்கா,  30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 338 விக்கெட்டுகளையும், 84 டி20 போட்டிகளில் ஆடி 107 விக்கெட்டுகளையும், 122 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 170 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண