2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக அனைத்து அணியின் வீரர்களும் மும்பையிலுள்ள நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரைடெண்ட் ஹோட்டலில் பயோ பபுளில் உள்ளனர். 


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஆகிய இருவரும் அணியுடன் இணைந்துள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூருவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் தங்களுடைய ஐபிஎல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். 






அந்தவகையில் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்தாண்டு தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த அணியின் வீரர் சூர்யகுமார் யாதவின் காயம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக அவர் மும்பை அணியின் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் வரும் 27ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 






ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தாண்டு தொடர் முழுவதும் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் சில முக்கிய வீரர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண