2022 ஐபிஎல் தொடர் நெருங்குவதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.
அதனை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு நேசமணியின் வசனத்தை ஓடவிட்டு எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தீவிரமாக பயிற்சி எடுத்து கொள்ளும் வீரர்கள், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குவார்கள் என தெரிகிறது.
மேலும் காயம் காரணமாக பயிற்சியில் கலந்து கொள்ளாத ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் உடற்தகுதி மேம்படுத்தல்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர்களுக்காக நிர்வாகம் இன்னும் காத்திருப்பதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
வீடியோவைக் காண:
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளின் அட்டவனை விபரம் இதோ:
தேதி | போட்டி | நேரம் | இடம் |
26.03.2022 | CSK vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
31.03.2022 | LSG vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
03.04.2022 | CSK vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
09.04.2022 | CSK vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
12.04.2022 | CSK vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
17.04.2022 | GT vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
21.04.2022 | MI vs CSK | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
25.04.2022 | PBKS vs CSK | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
01.05.2022 | SRH vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
04.05.2022 | RCB vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
08.05.2022 | CSK vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
12.05.2022 | CSK vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
15.05.2022 | CSK vs GT | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
20.05.2022 | RR vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்