2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியானது.


அதனால், ஒவ்வொரு அணியும் இதுவரை அணியில் விளையாடிய வீரர்களின் குழு புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில், சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு வார்னரும், பேர்ஸ்டோவும் பதில் கமெண்ட் செய்துள்ளனர். இதன் மூலம், அதிரடி பேட்டர்கள் வார்னரும், பேர்ஸ்டோவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்படவில்லை என்பது தெரிகின்றது










இதுவரை 24 இன்னிங்ஸில் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கின்றனர். அதில்,மொத்தம் 1401 ரன்கள் குவித்துள்ளனர். இந்த அதிரடி காம்போவை இனி ஆர்ஞ்ச் ஆர்மியில் பார்க்க முடியாது என ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஹைதராபாத் அணியின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்திருக்கும் பேர்ஸ்டோ, “ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். அதே போல, “இத்தனை ஆண்டுகளாக இருந்த ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோது உடன் இருந்த அனைவருக்கும் நன்றி. என் மீதும், அணியின் மீதும் அன்பு வைத்த அத்தனை ரசிகர்களும் நன்றிகள்” என தெரிவித்திருக்கிறார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண