2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கடந்த தொடர் வரை விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், மேக்ஸ்வேல், சாஹல், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட பல வீரர்கள் களமிறங்கியிருந்தனர். ஏபிடிவில்லியர்ஸ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்கவைக்க போவதில்லை. விராட் கோலியை நிச்சயம் பெங்களூரு அணி தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
விராட் கோலி- 15கோடி ரூபாய்
மேக்ஸ்வேல்- 11கோடி ரூபாய்
முகமது சீராஜ்- 7 கோடி ரூபாய்
பெங்களூரு அணியை பொருத்தவரை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஸ்ம்பா உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை. அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலையும் பெங்களூரு அணி தக்கவைக்கவில்லை. பெங்களூரு அணி வீரர்கள் ஏலத்தில் செலவிட 57 கோடி ரூபாய் உள்ளது. ஆகவே அந்த அணி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் சிலரை குறிவைக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், சாஹல் உள்ளிட்ட வீரர்களையும் எடுக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு சில அதிரடி ஆட்டக்காரர்களையும் பெங்களூரு அணி குறிவைக்கும் வைக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: IPL 2022: கேஎல் ராகுல், ரஷித் கான் ஐபிஎல் விளையாட ஓராண்டு தடையா... ஏன்..?