2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 


அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த தொடர் வரை  ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ட்ரென்ட் போல்ட், இஷான் கிஷன் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வந்தனர். ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணி என்பதால் மும்பை அணி அடுத்த ஐபிஎல் தொடருக்கு எந்தெந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்தது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு மும்பை அணி சார்பில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்:


ரோகித் சர்மா-  16கோடி ரூபாய்


ஜஸ்பிரீத் பும்ரா- 12கோடி ரூபாய்


சூர்யகுமார் யாதவ்- 8 கோடி ரூபாய்


பொல்லார்டு- 6 கோடி ரூபாய் 


 






மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்கள் இருவரையும் அந்த அணி தக்கவைக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷனையும் மும்பை அணி தக்கவைக்கவில்லை. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட், அணியின் அதிரடி தொடக்க ஆட்டாகரர் குவிண்டன் டிகாக் உள்ளிட்ட வீரர்களையும் அந்த அணி தக்கவைக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மும்பை அணிக்கு அடுத்து வரும் ஏலத்தில் செலவிட 48 கோடி ரூபாய் மீதமுள்ளது. எனவே ஹர்திக் பாண்டியா அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை மும்பை அணி திரும்பி எடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ட்ரென்ட் போல்ட்டையும் பந்துவீச்சிற்கு மும்பை குறிவைக்கும் என்று நம்பலாம். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: IPL 2022: கேஎல் ராகுல், ரஷித் கான் ஐபிஎல் விளையாட ஓராண்டு தடையா... ஏன்..?