IPL 2022 Retention: ராகுல் பை பை... பஞ்சாப் அணியில் தொடரும் மயாங்க், ஹர்ஷதீப் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணி, மயாங்க் அகர்வால், ஹர்ஷதீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது. 

Continues below advertisement

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மயாங்க் அகர்வால், ஹர்ஷதீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது. மயாங்க் 14 கோடிக்கும் ஹர்ஷதீப் சிங் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement