ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொண்டது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணிகள், தனது முதல் போட்டியில் விளையாடின.


இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 0 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய குஜராத் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால், இந்த சீசனின் முதல் போட்டியை கைப்பற்றியது குஜராத் அணி.






இந்த போட்டியில், 3 விக்கெட்டுகளை எடுத்த முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக பவுலிங் செய்த ஷமிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அந்த வரிசையில், அமெரிக்க போர்ன் ஸ்டாரான கேந்திரா லஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷமிக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 






“ஷமியின் மிகச்சிறந்த பர்ஃபாமென்ஸ் இது” என ட்வீட் செய்து வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இதனால், நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அமெரிக்க நடிகை ஒருவர் ஐபிஎல் போட்டி பார்த்து ஷமிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறாரா என அவரது ட்விட்டர் பக்கத்தை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும், இந்த ட்வீட்டையொட்டி மீம்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண