ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டுப்ளிசி தலைமையிலான பெங்களூரு அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி எதிர்கொண்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டர்கள் நிதானமான ஆட்டத்தை தொடங்கினாலும் பவர்ப்ளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால், ரன் சேர்க்க திணறியது அந்த அணி.
தொடர்ந்து களமிறங்கிய பேட்டர்களும் பெரிதாக சோபிக்காததால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ரஸல் மட்டும் பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளித்து 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். இதனால், 20 ஓவர்களை முழுமையாக விளையாடாத கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் குவித்திருக்கிறது. அடுத்து களமிறங்கும் பெங்களூரு அணிக்கு, 129 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை 30 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 13 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 17 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் இரு போட்டியில் பெங்களூர் அணியும், மூன்றில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன.
பெங்களூர் அணி கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டியது. அந்த அணியின் புதிய கேப்டன் பாப் டுப்ளிசிஸ் அதிரடி காட்டினார். 205 ரன்களை குவித்தும் அந்த அணி பந்துவீச்சு மோசமாக இருந்ததால் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்த போட்டியில் பெங்களூருவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்கிறது. பேட்டிங்கிலும் அசத்தி, எளிதான இலக்கை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்