ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தச் சூழலில் இன்று திடீரென்று சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.


 


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “நன்றாக உள்ளது. ஆனால் நான் ஒரு பெரிய இடத்தை நிரப்ப உள்ளேன். அது தான் சற்று பதற்றமாக உள்ளது. ஆனால் நான் அதற்கு கவலைப்பட தேவையில்லை. என்னுடன் தோனி இருக்கிறார். எந்த சந்தேகம் எந்த கேள்வி எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் தான் கேட்பேன். அவர் எப்போதும் என்னுடைய ஆலோசகராக இருந்தார். இனிமேலும் இருப்பார். நீங்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். 


 






மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக தற்போது வரை 190 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 116 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 73 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். மொத்தமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 61.37 வெற்றி சதவிகிதத்தை வைத்துள்ளார். 


மேலும் சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை தோனி வென்று தந்துள்ளார். இவை தவிர ஐபிஎல் தொடரில் 9 முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். 


 




மேலும் படிக்க:பொல்லார்டு விக்கெட் டூ டிஆர்.எஸ் - கேப்டனாக தோனி எடுத்த மாஸ்டர் ஐபிஎல் தருணங்கள் !




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண