ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வருகிறது.


பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். ஆனாலும், கடந்த போட்டியில் 69 ரன்களில் சுருண்டது அந்த அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் பெங்களூர் அசத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த அணியின் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் தனது அதிரடியான பேட்டிங்கை இன்று அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில், போட்டி நாளான இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ட்வீட்டை பதிவிட்டிருக்கிறது. அதில், “மும்பை - பூனே நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, நீங்கள் வேறு வழியில் வரலாம் தினேஷ் கார்த்திக்” என குறிப்பிட்டு  மும்பை - பூனேவின் தொலை தூர வழித்தடத்தை வரைந்து பதிவிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாட இருப்பதை தடுக்க வேடிக்கையான முறையில் ராஜஸ்தான் அணி மேற்கொண்டிருக்கும் திட்டம் இது என கமெண்ட் செய்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 






புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்புக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெறவே இரு அணிகளும் விரும்பும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண