ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் நிதானமாக தொடங்கினர்.
அதன்பின்னர் படிக்கல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த பட்லரும் அதிரடியாக ஆட தொடங்கினார். அவர் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்திருந்தது.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த படிக்கல் 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தன்னுடைய அரைசதத்திற்கு பிறகு பட்லர் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் தொடர்ந்து விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ச்சியாக 2ஆவது போட்டியில் சதம் அடித்து பட்லர் அசத்தினார். மேலும் நடப்புத் தொடரில் மூன்றாவது சதத்தை அவர் பதிவு செய்தார்.
ஒரே ஐபிஎல் தொடரில் அதிகமான சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பட்லர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் நடப்பு தொடரில் 3 சதம் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதங்களை அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் பட்லர் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் இவர் 7 போட்டிகளில் 491 ரன்கள் விளாசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்