ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புத் தொடரில் தற்போது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த முறை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. 


இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெற பெங்களூரு அணி தீவிரமாக முயற்சி செய்யும். பெங்களூரு அணியில் கடைசி இரண்டு போட்டிகளில் அணியின் கேப்டன் டூபிளசிஸ் சற்று சொதப்பி வருகிறார். அதேபோல் அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் மேக்ஸ்வேல் இருவரும் சொதப்பி வருகின்றனர். அவர்கள் இருவரின் ஆட்டம் அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் ஹசரங்கா ஆகியோர் அசத்தி வருகிறார். 






பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை நடப்புத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி  5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ராஜஸ்தான் ராயல் உடனான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தப் போட்டியில்  மீண்டும் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் ஷிகர் தவான் மற்றும் பன்சுகா ராஜபக்சே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை எட்டி அசத்தியது. ஆகவே கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இம்முறை ஆர்சிபி அணி பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் 29 முறை மோதியுள்ளன. அவற்றில் ஆர்சிபி அணி 13 முறையும், பஞ்சாப் அணி 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இந்த இரண்டு அணிகள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 4-இல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண