ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு ராவத் மற்றும் டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 


 


பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். மேலும் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 205 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 


 


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் மயாங்க் அகர்வால் நல்ல துவகத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இவரும் 71 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் மயாங்க அகர்வால் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறப்பாக ஆடிவந்த ஷிகர் தவான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பனுகா ராஜபக்சேவும் 43 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


 




யு-19 உலகக் கோப்பையை வென்ற ராஜ் அங்கத் பாவா முதல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 15 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. கடைசி 30 பந்துகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்டது. 


அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் ஷாரூக் கான் மற்றும் ஓடின் ஸ்மித் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். குறிப்பாக ஆட்டத்தின் 18ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசி ஓடின் ஸ்மித் அதிரடியாக ரன் சேர்த்தார். இதன்காரணமாக 18 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 195 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.  இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண