ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு ராவத் மற்றும் டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியை கேப்டன் டூபிளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் டூபிளசி சென்னையில் இல்லாவிட்டாலும் அவருடைய ஆட்டத்தை எப்போதும் ரசிப்போம் என்று கூறி கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்