2022 ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்களில் சற்று சொதப்பினர். இதனால் இரண்டாவது போட்டிக்கு முன்பாக சென்னை அணி பேட்டிங்கை சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் மொயின் அலி பங்கேற்பார் என தெரிகிறது. முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், அடுத்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சென்னை அணியில் புதிதாக இணைந்திருக்கும் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே, தோனியிடம் உரையாடியது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.


வீடியோவைக் காண:






அதில், 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டவுடன் தோனியின் தலைமையில் தான் விளையாட இருந்ததாக அவர் எதிர்ப்பார்த்து இருந்திருக்கிறார். ஆனால், ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 


இது குறித்து தோனியிடம் பேசி இருக்கும் டெவன் கான்வே, ”இந்த சீசனுக்கு மட்டும் நீங்கள் கேப்டனாக நீடிக்கலாம் அல்லவா? ஏனெனில், நான் உங்களது தலைமையில் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார். அதற்கு பதிலளித்திருக்கும் தோனி, “இல்லை வேண்டாம். ஆனால், இங்கதான் இருக்கப்போகிறேன்” என தெரிவித்திருக்கிறார். இந்த உரையாடலை டெவன் கான்வே ஒரு வீடியோ காட்சியில் பகிர்ந்திருக்கிறார்.


மேலும், ஐபிஎல் வரலாற்றில் தோனிதான் சிறந்த வீரர் எனவும் டெவன் கான்வே புகழாரம் சூட்டி இருக்கிறார். முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடும் அவர், அணி வீரர்களுடன் பழகி வருவதாகவும், எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண