ஐபிஎல் தொடர் கடந்த  மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். 2022 ஐபிஎல் தொடர் தொடங்கி 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், எதிர்ப்பாராத வகையில் சில வெற்றி, தோல்விகளுடன் 10 அணிகளும் புள்ளிப்பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. 9-ம் தேதி முடிவில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன என்பது பற்றிய அப்டேட்!

புள்ளிப்பட்டியல்:

அணி விளையாடியுள்ள போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 3 1 6
குஜராத் டைட்டன்ஸ் 3 3 0 6
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 3 1 6
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் 4 3 1 6
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 2 1 4
பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் 4 2 2 4
டெல்லி கேப்பிடல்ஸ் 3 1 2 2
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 1 2 2
மும்பை இந்தியன்ஸ் 4 0 4 0
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 0 4 0

புதிதாக சேர்க்கப்பட்ட அணிகள் இரண்டும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் மும்பை, சென்னை அணிகள் இன்னும் புள்ளி பட்டியலில் வெற்றி கணக்கை தொடங்காமல் கடைசி இரண்டு இடங்களில் நீடிப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

ஆரஞ்சு கேப்:

3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், 205 ரன்களுடன் ஆரஞ்சு கேப் வைத்திருக்கிறார். 

பர்பிள் கேப்:

4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். 8 விக்கெட்டுகளுடன் பெங்களூரு அணியின் ஹசரங்கா இரண்டாம் இடத்திலும், 7 விக்கெட்டுகளுடன் ராஜஸ்தான் அணியின் சாஹல் மூன்றாம் இடத்தில் உள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண