மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது ஆர்சிபி அணி வீரர் ஹர்ஷல் படேலின் தனது சகோதரியை இழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது தனது சகோதரியை இழந்தார். இந்த துயர நேரத்தில் தனது குடும்பத்துடன் இருக்க வேகப்பந்து வீச்சாளர் தற்போது ஐபிஎல் பயோ-பப்பிளை விட்டு வெளியேறியுள்ளார். இந்தப்போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் அணியில் இணைவார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்தைப் பற்றி அறிந்ததும் ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார். ஹர்ஷல் கடந்த இரண்டு சீசன்களில் பெங்களூரு அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
“துரதிர்ஷ்டவசமாக, ஹர்ஷல் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக பயோ பபிளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தனது சகோதரி இறப்பால், அவர் புனேவில் இருந்து மும்பைக்கு அணி பேருந்தில் திரும்பவில்லை. ஏப்ரல் 12 ஆம் தேதி சிஎஸ்கேக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார்" என்று ஐபிஎல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
31 வயதான அவர் கடந்த ஆண்டு அறிமுகமான பிறகு எட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்