ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.  இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 தொடரில் முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 


 லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் ராகுல், டி காக் ஓப்பனிங் களமிறங்கினர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் அவுட்டாக, ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். பாண்டே 38 ரன்கள் எடுக்க, ஸ்டாய்னிஸ் 10 ரன்கள் எடுக்க, தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க, ராகுல் மட்டும் அதிரடியை தொடர்ந்தார். 


9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார் ராகுல். இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அடித்த இரண்டு சதம் அடங்கும். ராகுலின் ஒன் மேன் ஷோவால், மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா கடந்த சில போட்டிகளாகவே விக்கெட் எடுக்க தடுமாறி வருகிறார். இதுவே மும்பை அணியின் வெற்றிக்கு பின்னடைவாக இருந்துள்ளது. கடந்த 6 போட்டிகளில் பும்ரா வெறும் 4 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 


பும்ராவின் இந்த மோசமான பார்மை பலரும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். மேலும், வருகின்ற டி20 உலககோப்பை 2022 தொடரில் பும்ரா இடம் பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. 


விவரம் : 


3/17(4) vs RR - 193/8(20)
0/26(3) vs KKR - 162/5(16)
0/31(4) vs RCB - 152/3(18.3)
1/28(4) vs PBKS - 198/5(20)
0/24(4) vs LSG - 199/4(20)






அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த 5 போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கி தந்து வருகின்றனர். டைமல் மில்ஸ், டேனியல் சேம்ஸ் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக ரன்களை தந்து வருகின்றனர். பும்ராவும் சற்று அதிகமாக ரன்களை கொடுத்து வருகிறார். இவர்கள் அனைவரும் குறிப்பாக ஒரு ஓவருக்கு சராசரியாக 9.6 ரன்கள் கொடுத்து வருகின்றனர். இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதை மும்பை அணி நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண