2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பயோ பபிள் முறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் பரவியது. அதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுடைய அணிக்கு வீரர்களை தேர்வு செய்தனர்.

இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.  மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

லிக் சுற்று போட்டிகள் விவரம்:

மும்பை வான்கடே மைதானம்  20 போட்டிகள்
மும்பை சிசிஐ மைதானம் 15 போட்டிகள்
மும்பை டி.ஒய் படீல் மைதானம் 20 போட்டிகள்
பூனே எம்.சி.ஏ மைதானம் 15 போட்டிகள்

அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்

க்ரூப் விவரங்கள்:

க்ரூப் ஏ க்ரூப் பி
மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ்

இந்நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் ஒவ்வொரு அணியும் அதே பிரிவைச் சேர்ந்த மற்ற அணிகளுடன் இரண்டு போட்டிகளிலும், மற்றொரு பிரிவில் அதே இடத்தில் உள்ள இன்னொரு அணியுடன் 2 போட்டிகளிலும், இன்னொரு பிரிவின் மீதம் இருக்கும் அணிகளுடன் தலா 1 போட்டியிலும் விளையாட உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர