2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெற இருப்பதாகவும் தகவல் பரவியது. அதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுடைய அணிக்கு வீரர்களை எடுத்துக்கொண்டனர். 


இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் லீக்கில் சேர்க்கப்பட்டால், மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் என்றும், போட்டியின் தொடக்கத்தில் சுமார் 40 சதவீதம் பேர் மைதானங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், மார்ச் 26ஆம் தேதி சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கும். அனைத்து போட்டிகளும் மும்பையின் வான்கடே ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே மைதானத்தில் நடைபெறும். வான்கடே மற்றும் DY பாட்டீலில் தலா 20 ஆட்டங்களும், பிரபோர்ன் மற்றும் கஹுஞ்சே மைதானத்தில் தலா 15 ஆட்டங்களும் நடத்தப்படும் என்றார். 


அதேபோல், பிளே-ஆஃப் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது. 






ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது மொத்தம் 551.70 கோடி ரூபாய்க்கு 10 உரிமையாளர்கள் மொத்தம் 204 வீரர்கள் தேர்வு செய்தனர். ஏலத்தில் இஷான் கிஷன் (ரூ. 15.25 கோடி), தீபக் சாஹர் (ரூ. 14 கோடி) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 12.25 கோடி) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர