ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர். 


இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,தொடரில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளார் மிட்செல் ஸ்டார்க் தகவல் தெரிவித்துள்ளார். "இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆவலாகதான் இருந்தேன். ஆனால் அதில் பங்கேற்கும் முன்பு 22 வாரத்திற்கு மேலாக  தனிமையில் இருக்கவேண்டும் என்ற நிலைதான் எனக்கு பிரச்சனையாக இருந்தது.


நான் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு செல்ல விரும்பும் ஒரு காலம் நிச்சயமாக வரும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக என்னால் முடிந்தவரை விளையாட வேண்டும் என்ற ஆசையில், நான் எடுத்த முடிவுதான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக எட்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும். அந்த காலத்தில் நான் என் மனைவி அலிசா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இது எனக்கு வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளார். 




ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உலக கிரிக்கெட்டில் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் வரை, ஸ்டார்க் அனைத்து வடிவங்களிலும் தனது திறமைகளை வெளிபடுத்திவருகிறார். மேலும் அவரைப் போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வரவிருக்கும் மெகா ஏலத்தில் நிச்சயமாக பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார்க் இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஸ்டார்க் இதுவரை ஐபிஎல் தொடரில் இரண்டு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதுவும், 2014 மற்றும் 2015ல் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண