ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர்.
இந்நிலையில், நடைபெற இருக்கும் ஐபிஎல் ஆக்ஷனில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தொடக்க விலையாயின் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாயை 17 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பிரிவில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் முழு பட்டியல் இங்கே:
ரவிசந்திரன் அஷ்வின், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, படிக்கல், சுரேஷ் ரெய்னா, ஹர்ஷல் பட்டேல், ராபின் உத்தப்பா, க்ருனால் பாண்டியா, தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், அம்பதி ராயுடு, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், சாஹல்
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைத்தது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும், போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் கிடைத்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்