ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் நடைபெற்றது. அதில் 161 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர் தவிர மற்ற சில வீரர்களும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளது.
இதில் முதல் நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்)
ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்)
பிராவோ(4.4 கோடி ரூபாய்)
அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்)
துஷார் தேஷ்பாண்டே(4.4 கோடி ரூபாய்)
கே.எம்.ஆசிஃப்(20 லட்சம் ரூபாய்)
சிவம் துபே(4 கோடி ரூபாய்)
மஹீஷ் திக்ஷானா(70 லட்சம் ரூபாய்)
சிமர்ஜீத் சிங்(20 லட்சம் ரூபாய்)
டேவான் கான்வே(1 கோடி ரூபாய்)
டிவைன் பிரிட்டோரியஸ்(50 லட்சம் ரூபாய்)
ராஜ்வர்தன் ஹங்கரேக்கர்(1.50 கோடி ரூபாய்)
மிட்சல் சாண்டனர்(1.90 கோடி ரூபாய்)
ஆடம் மில்னே(1.90 கோடி ரூபாய்)
சுப்ஹரன்ஷூ சேனாபதி(20 லட்சம் ரூபாய்)
முகேஷ் சௌதரி(20 லட்சம் ரூபாய்)
பிரசாந்த் சோலான்கி(1.20 கோடி ரூபாய்)
ஏற்கெனவே சென்னை அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேரை தக்கவைத்துள்ளனர். சிஎஸ்கே அணியிடம் தற்போது 7.15 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது.
மேலும் படிக்க:IPL Auction 2022 Day 2 LIVE: ஐபிஎல் வீரர்கள் ஏலம் போட்டி போட்டு கொண்டு வீரர்களை குவிக்கும் சிஎஸ்கே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்