நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வருகிறது. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு வீரர்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ், மொயின் அலி அவுட் ஆகி சென்ற பிறகு ஷிவம் டுபே, உத்தப்பா ஆகியோர் முதலில் பொறுமையாக ஆடி, 10 ஓவர்களுக்கு பிறகு ஆர்சிபி பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் மாறி மாறி அடித்து அணியின் ரன்களை வேகமாக ஏற்றினார்கள். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் அடித்த சிஎஸ்கே அடுத்த 10 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.


துபே, உத்தப்பா ஒரு ஓவருக்கு ஒரு சிக்சர் என 16 ஓவரில் இருந்து அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த பிறகுதான், இன்னும் அதிரடி காட்டினர். சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை செய்யாமல் சென்றுவிட்டனர். இதில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் தொடலாம் என்ற நிலையில் துபே இருந்தார். ஆனால், அவர் அடித்த பந்து டு பிளிசஸ் இடம் கேட்ச் ஆனது. அவர் பந்தை கீழே வைத்ததால், 95 நாட் அவுட் உடன் துபே பெவிலியன் திரும்பினார். 


இறுதியில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளிசி எட்டு ரன்களுடனும், கோலி 1 ரன்களிலும் நடையைக்கட்டினர். தொடர்ந்து, அனுஜ் ராவத் 12 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 






பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வல் தொடக்கத்திலேயே இரண்டு பௌண்டரி, இரண்டு சிக்ஸர் அடித்து விளையாட ஜடேஜா வீசிய 7 வது ஓவரில் 26 ரன்களில் கீளீன் போல்டானார். இதன் மூலம், ஜடேஜாவிற்கு எதிரான 12 இன்னிங்ஸில் மேக்ஸ்வல் 7 முறை அவுட்டாகியுள்ளார். ஒரு வீரருக்கு எதிராக அதிக விக்கெட்கள் வீழ்த்திய சென்னை வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண