15வது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று முக்கியமான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களது முதல் வெற்றிக்காக களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித்சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கை ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் தொடங்கினர்.




ஆட்டம் தொடங்கிய உடனே ஜோஸ் பட்லர் ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால், இளம் வீரர் ஜெய்ஸ்வால் பும்ராவின் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், ஜோஸ் பட்லர் மறுமுனையில் அதிரடி காட்டினார். பாசில் தம்பியின் முதல் ஓவரிலே இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 6 ஓவர்களில் 48 ரன்களை எடுத்தது.


பின்னர், கேப்டன் சஞ்சு சாம்சன் – ஜோஸ் பட்லர் ஜோடி கூட்டணி அமைத்தது. ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் சிறப்பாக ஆடிய பட்லர் 32 பந்தில் அரைசதம் அடித்தார். ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் 87 ரன்களை எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆட அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆடத்தொடங்கினார். இதனால் அந்த அணி 11-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.




இதன்பின்னர், ஜோஸ் பட்லர் மற்றும் சாம்சன் இருவரும் அதிரடியாக ஆடத்தொடங்கினர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சாம்சன் பொல்லார்ட் வீசிய பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. 4 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹெட்மயர் களமிறங்கியது முதல் அதிரடியில் இறங்கினார், அவர் இறங்கியது முதல் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் அனுப்பினார். இதனால், 17 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 170 ரன்களை எட்டியது. களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர்  அவர் 66 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்தார். சதமடித்த உடனே ஜோஸ் பட்லர் பும்ரா பந்தில் போல்டானார். அவர் 68 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்தார்.


ஜோஸ் பட்லர் அவுட்டாகிய அடுத்த ஓவரின் முதல் பந்திலே ஹெட்மயரும் அவுட்டானார். அவர் 14 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண