ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது. 


இந்நிலையில் இன்று தன்னுடைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை விளையாடுகிறது. இந்தப் போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குகிறார். ஆகவே மும்பை அணிக்கு பேட்டிங்கில் இது கூடுதல் பலமாக அமைந்திருக்கும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பை-ராஜஸ்தான் அணிகள் 26 முறை மோதியுள்ளன. அவற்றில் மும்பை 14 முறையும், ராஜஸ்தான் 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 






இவற்றில் மும்பை அணி முதல் பேட்டிங் செய்து 8 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்து 6 முறையும் வென்றுள்ளது. ராஜஸ்தான் முதல் பேட்டிங் செய்து 2 முறையும் சேஸ் செய்து 10 முறையும் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எப்போதும் மும்பை கேப்டன் ரோகித் சர்மா நன்றாக செயல்படுவார். அதேபோல் மும்பை அணிக்கு எதிராக தற்போதைய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார். 






ஆகவே இன்றைய போட்டியில் இரு அணியின் கேப்டன்களும் நன்றாக விளையாடுவார்கள் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  ஏனென்றால், 2012ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் எப்போதும் தன்னுடைய முதல் போட்டியில் வென்றதில்லை என்ற சோகத்தை தொடர்ந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண