2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை அணியைத் தவிர மற்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கணக்கை திறந்திருக்கின்றன. இந்நிலையில், வார இறுதியான சனிக்கிழமை நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்


புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. 


குஜராத் - கொக்கத்தா அணிகள் மோதும் முதல் போட்டி என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலமான அணியாக டஃப் கொடுத்து வரும் குஜராத்தை சமாளிக்க, கொல்கத்தா அணி திட்டமிட வேண்டும். இனி வரும் போட்டிகள், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவதை உறுதி செய்யும் என்பதால், ஒவ்வொரு வெற்றியும் முக்கியம். 






ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


புள்ளிப்பட்டியலில் மூன்றாது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. 


இதுவரை 20 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 11 போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 8 முறை பெங்களூரு அணியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படாமலும் உள்ளன. 


ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில், வலுவான அணிகளாக நிரூபித்திருக்கும் பெங்களூரு, ஹைதராபாத் மோதும் இந்த போட்டி சவாலானதாக இருக்கும் என தெரிகிறது.


பிராபோர்ன் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு இது முதல் போட்டி. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, கொல்கத்தாவை எதிர்கொண்டு ஆடிய போட்டியில், வெற்றி கண்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண