2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 


விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங்கின் போது 20ஆவது ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோவ்மேன் பவல் களத்தில் இருந்தார். முதல் இரண்டு பந்துகளில் அவர் சிறப்பாக சிக்சர் அடித்தார். அதன்பின்னர் 3ஆவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அந்தப் பந்து ஃபுல் டாஸாக வந்தது. அது நோபாலாக இருக்கும் என்று டெல்லி அணியின் வீரர்கள் அனைவரும் கேட்டனர். எனினும் நடுவர்கள் அதை நோபால் ஆக அறிவிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 


அப்போது, கள நடுவரின் முடிவுக்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் பண்ட், பேட்டிங் செய்து கொண்டிருக்கும் அணி வீரர்கள் திரும்ப வரச்சொல்லி சைகை செய்தார். அதனை அடுத்து, ஃபீல்டிங் பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவை களத்திற்கு அனுப்பி கள நடுவர்களுடன் பேச சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


வீடியோவைக் காண:






முன்னதாக, 2019-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. சென்னை அணி பேட்டிங் செய்தபோது, கடைசி ஓவரின் நான்காவது பந்து நோபால் வீசப்பட்டது. ஆனால், கள நடுவர்கள் நோ பால் அளிக்காததால் கேப்டன் தோனி களத்திற்கு சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


நேற்று நடைபெற்ற சம்பவத்தையொட்டி தோனியின் சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், கமெண்ட் செய்து வருகின்றனர். போட்டி முடிந்தபின், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பண்ட், “எங்கள் அணியில் இருந்து ஒருவரை உள்ளே அனுப்பியது தவறுதான். ஆனால், அதே போல எங்களுக்கு நடந்ததும் தவறுதான்” என தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண