நடப்பு ஐபிஎல் சீசனை அடுத்து நடக்க இருக்கும் 2022 ஐபிஎல் சீசனில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கூடுதலாக இரண்டு புதிய அணிகள், கேப்டன்சி மாற்றங்கள், வீரர்கள் அணி மாற்றம் என அடுத்த சீசன் புதிதாய் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்த சீசனில், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தது. பஞ்சாப் அணியைப் பொருத்தவரை, 14 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இதனால்,12 புள்ளிகளுடன் ஆறாவது இடம் பிடித்து ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது.


இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி, 626 ரன்கள் எடுத்து தற்போது ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்திருக்கிறார் ராகுல். அடுத்த இடங்களில் ருதுராஜ், ஷிகர் தவான், டுப்ளெசி ஆகியோர் இருப்பதால், இன்னும் ப்ளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெற இருப்பதால் ஆரஞ்சு கேப் கைமாறி செல்ல வாய்ப்பிருக்கின்றது. எனினும், இந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்த ராகுல் 6 அரை சதங்கள் கடந்து அசத்தி இருக்கிறார்









இந்த சீசனில் தாண்டவம் ஆடிய ராகுலின் பேட்டிங்கிற்காகவே மற்ற அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் அறிமுகமானபோது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய ராகுல், 2018-ம் சீசன் முதல் பஞ்சாப் அணிக்காக் விளையாடி வருகிறார். 2018-ம் ஆண்டு முதல் அப்போதுமாய் இப்போதுமாய் கேப்டன்சி பொறுப்பில் இருந்த ராகுல், 2020 சீசன் முதல் முழு கேப்டன்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.


டி-20 கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பதிவு செய்துள்ள ராகுல், பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அணியில், புதிய பொறுப்பில் ராகுல் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2022 ஐபிஎல் சீசனில் நிறைய மாற்றங்கள் இருக்கப்போவது உறுதி.   


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


லல


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண