மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 198 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை தொடக்க வீரர் ரோகித் சர்மாவும், இஷான்கிஷானும் 32 ரன்களுக்குள் ஆட்டமிழந்த நிலையில் திலக் வர்மாவும், டேவல்ட் ப்ரெவிசும் ஜோடி சேர்ந்தனர். குறிப்பாக, இளம் வீரர் ப்ரெவிஸ் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினர்.




குறிப்பாக, 9வது ஓவரை வீசிய ராகுல் சஹாருக்கு அது மறக்கப்பட வேண்டிய ஓவராக அமைந்தது. அந்த ஓவரின் 2வது பந்திற்கு ஸ்ட்ரைக்கிற்கு வந்த ப்ரெவிஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தையும் ஹாட்ரிக் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ராகுல் சஹார் வீசிய கடைசி பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை குவித்தார். இதனால், மும்பையின் ரன் வேகமும் மளமளவென உயர்ந்தது. அவரை ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மைதானத்தின் உள்ளே வந்து பாராட்டினர். 


கடைசியில் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த ப்ரெவிஸ் ஓடீன் ஸ்மித் பந்தில் அவுட்டானார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண