ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி சார்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா களமிறங்கி தான் வீசிய முதல் பந்தில் முதல் விக்கெட் எடுத்துள்ளார். மேலும் அந்தப் போட்டியில் அவர் வீசிய இரண்டாவது ஓவரிலும் முதல் பந்தில் விக்கெட் எடுத்தார். 


 


இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் யார்?


 


இஷாந்த் சர்மா(2008):


2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கேகேஆர்  அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மா தன்னுடைய முதல் பந்தில் ராகுல் டிராவிட் விக்கெட்டை எடுத்தார்.


 


வில்கின் மோட்டா(2008):


2008 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வில்கின் மோட்டா தன்னுடைய முதல் பந்தில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா விக்கெட்டை வீழ்த்தினார். 


 


ஷேன் ஹார்வூட்(2009):


2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் அணியின் ஷேன் ஹார்வூட் தன்னுடைய முதல் பந்தில் அசார் விக்கெட்டை வீழ்த்தினார். 


 


அமித் சிங்(2009):


2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அதில் அறிமுக வீரராக அமித் சிங் களமிறங்கி தன்னுடைய முதல் பந்தில் சன்னி சோஹேல் விக்கெட்டை எடுத்தார். 


 


சார்ல் லெங்வேல்ட்(2009):


2009 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சார்ல் லெங்வேல்ட் களமிறங்கினார். அந்தப் போட்டியில் தன்னுடைய முதல் பந்தில் அவர் ராப் குயைனி விக்கெட்டை எடுத்தார். 


 


அலி மோர்டாசா(2010):


2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை-ராஜஸ்தான் போட்டியில் அலி மோர்டாசா களமிறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் நமன் ஓஜா விக்கெட்டை எடுத்தார். 


 


டிபி சுதிந்திரா(2012): 


2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ்-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுதிந்திரா களமிறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் டூபிளசி விக்கெட்டை எடுத்தார். 


 


அல்சாரி ஜோசப்:


2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. அல்சாரி ஜோசப் முதல் பந்தில் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். 


 


மதீஷா பதிரனா:


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மதீஷா பதிரனா களமிறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண