விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, ஆரம்பத்திலேயே ஒரு முக்கியமான விக்கெட் சரிந்தது. வந்த வேகத்தில் அதிரடி பேட்டர் ஜோஸ் பட்லர் அவுட்டாக, அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். யஷஸ்வி, சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு178 ரன்கள் குவித்தது.
அதனை அடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு, சொதப்பலான ஆரம்பாக அமைந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் டி காக், ராகுல், ஆயுஷ் படோனி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தீபக் ஹூடா அரை சதம் கடந்து ரன் சேர்த்தார். அவரை அடுத்து களமிறங்கிய க்ருணால் பாண்டியா, ஸ்டாய்னிஸ் கொஞ்சம் ரன் சேர்க்க, இலக்கை நெருங்கியது லக்னோ. இன்னொரு புறம் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்தனர். போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுக்க, சாஹால், அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. இதனால், 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.
புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் லக்னோ அணி, ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு சென்றிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்