இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இம்முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பல வீரர்கள் வேறு அணிகளுக்கு மாறியுள்ளனர். இதனால் இந்தத் தொடர் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 


 


இந்நிலையில் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி ஏற்கெனவே ஜோஸ் பட்லரை தன்னுடைய அணியில் தக்கவைத்து இருந்தது. இதனால் ஜோஸ் பட்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் இம்முறை ஒரே அணியில் இடம்பெற்றுள்ளனர். 


 






இது ரசிகர்கள் பலரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அப்போது ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியில் இருந்தார். பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரவிச்சந்திரன் மன்கட் முறையில் பட்லரை ரன் அவுட் செய்தார். அப்போது இது மிகவும் பேசுப்பொருளாக மாறியது. கடந்த மாதம் எம்.சி.சி. கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி இனிமேல் அந்த முறை மன்கெட் என்பதற்கு பதிலாக ரன் அவுட் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


 


இதன்காரணமாக இந்த இருவரும் எப்படி ஒரே அணியில் விளையாட போகிறார்கள் என்று பலரும் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் தற்போது இருவரும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியில் ஈடுபட்டுள்ள படத்தை அந்த அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் படம் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. ரன் அவுட்டில் தொடங்கிய அவர்களுடைய பந்தம் தற்போது ஒரே அணியில் விளையாடும் அளவிற்கு மாறியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அஷ்வின் பந்துவீசும் போது பட்லர் கீப்பிங் செய்யும் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 




மேலும் படிக்க: இன்னும் 4 நாட்களில் ஐபிஎல்.. தவான் டூ ரோகித் - ஐபிஎல் தொடரின் பவுண்டரி மன்னர்கள் யார்... ?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண